தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அன்புமணி ‘ஈஸ்டர் திருவிழா’ வாழ்த்து...! - PMK

சென்னை: கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருவிழாவை முன்னிட்டு பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அன்புமணி வாழ்த்து

By

Published : Apr 21, 2019, 2:11 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குத்தத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது.

தீயவர்களால் சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுபிரான் உயிர்த்தெழுந்து வந்தது கிறித்தவர்களுக்கு எத்தகைய மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் அளித்ததோ, அதேபோன்ற ஆனந்தம் அடுத்த 33 நாட்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கவிருக்கிறது. அந்த நாளில் தீயவர்கள் வீழ்வது உறுதியாகிவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details