தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Breaking: அண்ணா பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் - சென்னை வருகிறார் பிரதமர் மோடி

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பட்டங்களை வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

pm modi will attend the 42nd Anna University Convocation
pm modi will attend the 42nd Anna University Convocation

By

Published : Jul 20, 2022, 4:38 PM IST

சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை, பிஹெச்டி பட்டங்களை 2021ஆம் ஆண்டில் முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இதனால், வெளிநாடுகளில் படிப்பதற்குச் செல்லும் மாணவர்கள் சான்றிதழ்களை பெறுவதற்கு மிகவும் சிரமப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

மேலும், பட்டமளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்காமல் இருந்ததால், தள்ளிப்போவதாக கூறப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறும்போது, ’தமிழ்நாடு ஆளுநர் பட்டமளிப்பு விழாவிற்கான அனுமதியை வழங்குவார்’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் நடைபெறும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி வரும் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த நாள் (ஜூலை 29) அண்ணா பல்கலைக்கழகத்தின் 42ஆவது பட்டமளிப்பு விழா, சென்னை விவேகானந்தர் அரங்கில் நடைபெறுகிறது.

அந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களையும், பரிசுகளையும் வழங்க உள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக் கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சரும், இணை வேந்தருமான பொன்முடி, துணை வேந்தர் வேல்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details