தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விலகி நின்ற மு.க.ஸ்டாலின்; அரவணைத்த மோடி: சென்னை விழாவில் நெகிழ்ச்சி - கலங்கரை விளக்க திட்டம்

லைட் ஹவுஸ் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையினை வழங்கினார். அப்போது மு.க.ஸ்டாலின், மோடி இடையே நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது.

கலங்கரை விளக்க திட்டம்
கலங்கரை விளக்க திட்டம்

By

Published : May 27, 2022, 11:16 AM IST

Updated : May 27, 2022, 12:42 PM IST

சென்னை: நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று (மே 26) பிரதமர் மோடி ரூ.31,530 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார்.

குறிப்பாக பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சென்னை, பெரும்பாக்கம் திட்டப் பகுதியில் முன்மாதிரி வீட்டு வசதி திட்டமான லைட் ஹவுஸ் திட்டத்தில் ரூ.116.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,152 குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையினை வழங்கினார்.

விலகி நின்ற மு.க.ஸ்டாலின்; அரவணைத்த மோடி

இதனிடையே பிரதமர் மோடி பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையினை வழங்கும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விலகி நின்றார். உடனே அருகே அழைத்து மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து பிரதமர் மோடி பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையினை வழங்கினார். இச்சம்பவம் காண்போரை நெகிழச் செய்தது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:மு.க.ஸ்டாலினின் அரசியல் நாடகம்; தமிழ்நாடு சரித்திரத்தில் கரும்புள்ளி: அண்ணாமலை

Last Updated : May 27, 2022, 12:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details