சென்னை:சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக 42ஆவது பட்டமளிப்பு விழா இன்று(ஜூலை 29) நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினர். அதன் பின் நிகழ்ச்சியில் மோடி உரையாடினார்.
‘அனைவருக்கும் வணக்கம்’ என தமிழில் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, பட்டம் பெறும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, நாட்டை கட்டமைப்பதில் ஆசிரியர்கள் முக்கியப்பங்காற்றுகிறார்கள் நாளைய தலைவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு முக்கியப்பங்கு உள்ளதாகவும் கூறினார்.
மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய மோடி இந்தியாவின் இளைய சமூகத்தை உலகம் உற்று நோக்குகிறது, உலகளவில் வாய்ப்புகளை உருவாக்கும் நாடாக இந்தியா உருவாகியுள்ளது என்றும், அப்துல் கலாமின் கருத்துகள் இளைஞர்களை ஊக்கம் பெறச்செய்தது என்றும் கூறிய பிரதமர் இது இளைஞர்களுக்கு வாய்ப்புகள் நிறைந்த தருணம் என்றும் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா இந்தியாவில் தொழில்துறை முன்னேற்றம்:கரோனா காலத்தில் நாட்டைப் பாதுகாக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் உலக அளவில் செல்ஃபோன் உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் உள்ளதாகவும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும், வாகன ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
தடைகளை எல்லாம் வாய்ப்புகளாக மாற்றி இந்தியா முன்னேறி வருவதாகக் கூறிய பிரதமர், குழந்தைகள் கூட தொழில்நுட்பங்களை எளிதாகப்பயன்படுத்தி வருகிறார்கள் எனக் கூறினார். மேலும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் உலகிலேயே இந்தியா முன்னிலை வகிக்கிறது என்றும், இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாற முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
‘நாளைய தலைவர்களை உருவாக்குவதில் ஆசிரியருக்கு பங்குண்டு’ - பிரதமர் மோடி புதிய மாற்றங்களுக்கு நம்மை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும்; கட்டுப்பாடுகளை விதிப்பது வலிமையான அரசு அல்ல என்றும் கூறிய பிரதமர் உள்கட்டமைப்பை மேம்படுத்த துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்;
மேலும் மாணவர்கள் கற்கும்போது இந்தியாவும் கற்றுக்கொள்வதாகவும் மாணவர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி எனவும் கூறி அவரது உரையை முடித்தார்.
இதையும் படிங்க:உலகிலேயே மிக நீளமான மூவர்ணக்கொடி - கெஜ்ரிவால் மக்களுக்கு அழைப்பு