சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று (ஜூலை 28) சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின், பிரதமர் மோடி இன்று (ஜூலை 29) காலை 11.55 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து விமானப்படையின் தனி விமானம் மூலம் அகமதாபாத் புறப்பட்டார்.
இதற்கு முன், விமான நிலையத்தில், ஓ.பன்னீர்செல்வத்தை சிறிதுநேரம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,"பிரதமர் நரேந்திர மோடி எனது உடல் நலம் குறித்து விசாரித்தார். அதோடு உடல் நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்" என்றார்.