சென்னை: தமிழ்நாட்டில் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி ரூ.31,530 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,ஆளுநர் ரவி, தமிழ்நாடு அமைச்சர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள 5 ரயில் நிலையங்களின்மறு சீரமைப்பு பணிக்காக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இத்திட்டததில் 760 கோடி செலவில் உலகத் தரத்தில் சீரமைக்கப்பட உள்ள எழும்பூர் இரயில் நிலைய சீரமைப்பு பணிகள்,ரூ.256 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சுமார் 30 கி.மீ. தூரத்துக்கு 3-வது பாதை, ரூ.450 கோடி செலவில் 90.4 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள மதுரை - தேனி அகலப்பாதை திட்டம், தாம்பரம் - செங்கல்பட்டு மற்றும் மதுரை - தேனி வழித் தடங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை உள்ளிட்ட திட்டங்களை துவக்கி வைத்தார். அதேபோல் 28,500 கோடி செலவில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இதையும் படிங்க: 'தமிழ் மொழியையும், கலாசாரத்தையும், மேம்படுத்த இந்திய அரசாங்கம் முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறது' - பிரதமர் மோடி!