தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊரடங்கு நீட்டிப்பா...? தொடங்கியது ஆலோசனை - ஊரடங்கு நீட்டிப்பா...? தொடங்கியது ஆலோனை

சென்னை: கரோனா வைரஸ் பரவல் குறித்து விவாதிக்கவும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

pm modi held meeting
pm modi held meeting

By

Published : Apr 27, 2020, 10:41 AM IST

Updated : Apr 27, 2020, 12:03 PM IST

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் ஆலோசனை தொடங்கியது. இதில், ஊரடங்கில் இருந்து எப்போது வெளிவருவது அல்லது தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை நீட்டிக்கவும், தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதி வழங்கவும் கோரிக்கை வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

pm modi held meeting

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அந்த துறையின் செயலர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Last Updated : Apr 27, 2020, 12:03 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details