சென்னை:தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் காலை 10 மணி முதல் மாலை 8 வரை இருந்ததை, மதியம் 12 மணி முதல் இரவு 10 வரை மாற்றி டிசம்பர் 2ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றம்... உயர் நீதிமன்றத்தில் வழக்கு... - டாஸ்மாக் நிர்வாகம் மீது வழக்கு
டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "தொழிற்சங்க சட்டத்தின்படி வேலை நேரம் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு 21 நாள்கள் முன் அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இந்த விற்பனை நேரம எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் மாற்றப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம் என்பாதால் ரத்து செய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இரவு 10 மணி என்பது மக்கள் நடமாட்டம் குறைவான நேரம் என்பதால், பணப்புழக்கம் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இனி பழையபடி டாஸ்மாக் - அரசு அறிவிப்பு