சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாடி வருகின்றனர். மூன்றாவது சுற்று இன்று தொடங்கியது. போட்டி தொடங்கப்பட்டு சில மணி நேரங்களில் இந்தியாவில் மூன்றாவது பிரிவு சார்ந்த நந்திதாவின், எதிரணி வீரர் வராத காரணத்தினால் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த நந்திதா, "இது எனது முதல் ஒலிம்பியாட் போட்டி, மூன்று போட்டிகள் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இனிவரும் காலங்களில் சிறப்பாக விளையாடுவேன். இன்று யாருடன் போட்டி நடக்கிறதோ அவர்களைப் பற்றி மட்டுமே கவனம் கொள்வேன். நாளை நடைபெறும் போட்டியை நாளை யாருடன் விளையாடுவேன் என்று வந்த பிறகு தான் கவனம் செலுத்துவேன்.