சென்னை, ஆவடி அடுத்த அயப்பாக்கம், அபர்ணா நகர், சரஸ்வதி தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.
இவர், இதே பகுதி செல்லியம்மன் கோயில் தெருவில் பழைய பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு செந்தில்குமார் குடோனை பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றார்.
பின்னர்,குடோன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதிலிருந்து வெளியேறிய கரும்புகை குடியிருப்புக்களில் புகுந்தது.
இதை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி அடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீவிபத்தில், குடோனில் இருந்த சுமார் ரூ.4லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.
இது தொடர்பாக திருமுல்லைவாயல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குடோன் தீப்பிடித்து எரிந்ததற்கு நாசவேலை காரணமா அல்லது மின்கசிவா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பிளாஸ்டிக் குடோன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.