தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் சிற்றுந்துகள் இயக்க திட்டம்

சென்னையில் அதிக இழப்பு ஏற்பட்டதன் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் 144 சிற்றுந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Published : Sep 9, 2021, 7:01 AM IST

சிறிய பேருந்துகள் இயக்க திட்டம்
சிறிய பேருந்துகள் இயக்க திட்டம்

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது வெளியிடப்பட்ட அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில்,

"சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் லிமிடெட் 210 சிற்றுந்துகளைக் கொண்டுள்ளது. இவற்றுள், 66 சிற்றுந்துகள் தற்போது இயக்கப்பட்டுவருகின்றன.

பயணிகளின் பயன்பாடு குறைந்து, அதிக இழப்பு ஏற்பட்டதன் காரணமாக 144 சிற்றுந்துகள் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

சிற்றுந்துகளை இயக்க திட்டம்

எனவே, நிறுத்தப்பட்டுள்ள இச்சிற்றுந்துகளைச் சிறந்த முறையில் பயன்படுத்திட, பிற பகுதிகளிலிருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இயக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் அதிகரிக்கும்.

இதனைச் செயல்படுத்திட மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:’புதிய பேருந்துகளை இயக்க ஜெர்மனியுடன் பேச்சுவார்த்தை’ - அமைச்சர் ராஜகண்ணப்பன்

ABOUT THE AUTHOR

...view details