தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசுப் பேருந்துகளில் திருக்குறள் பலகைகள் பொருத்த திட்டம் - திருக்குறல் பலகைகள்

அரசுப் பேருந்துகளில் திருக்குறளின் நெறிகளைப் பரப்புவதற்காக திருக்குறளும் அதன் பொருளும் அடங்கக்கூடிய பலகைகள் பொருத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்குறள் பலகைகள்
திருக்குறள் பலகைகள்

By

Published : Sep 9, 2021, 6:46 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (செப். 8) போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

அதில், தமிழ்நாட்டில் புதியதாக BS - IV குறியீட்டிற்கு இணக்கமான இரண்டாயிரத்து 213 டீசல் பேருந்துகள், 500 மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்தல்.

சென்னை கடற்கரை கொருக்குப்பேட்டை இடையே மூன்றாவது, நான்காவது புதிய ரயில் பாதை திட்டம் அமைத்தம் உள்ளிட்ட 10 வகையான திட்டங்களைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டார்.

அரசுப் பேருந்துகளில் திருக்குறள் பலகைகள்

அதைத் தொடர்ந்து அரசுப் பேருந்துகளில் திருக்குறளின் நெறிகளைப் பரப்புவதற்காக, தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் திருவுருவம், திருக்குறள், திருக்குறளின் விளக்கங்களுடன் கூடிய பலகைகள் பொருத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய கோரும் தீர்மானம் - பேரவையில் காரசார விவாதம்

ABOUT THE AUTHOR

...view details