சென்னை:தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை 2018-19ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 2018-19ஆம் ஆண்டு காலிப்பணியிடங்கள் 97 நிரப்புவதற்கு போட்டி எழுத்துத்தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
120 வட்டார கல்வி அலுவலர் பணியிடம் ஜன. 24ஆம் தேதிக்குள் நிரப்ப திட்டம் - ஆசிரியர் தேர்வு வாரியம்
பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிய உள்ள 120 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை முடித்து ஜனவரி 24ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறையிடம் பட்டியல் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இந்த 42 ஆயிரத்து 686 தேர்வர்களுக்கு 2020 பிப்ரவரி 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வின் தற்காலிக விடை குறிப்புகள் 2020 பிப்ரவரி 26ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 2021 ஜனவரி 27ஆம் தேதி வட்டார கல்வி அலுவலர் பணிக்கான இறுதி விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இந்தத் தேர்வில் தவறாகக் கேட்கப்பட்ட வினாவுக்கு அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் தகுதிபெற்ற தேர்வர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.