சென்னை:அப்போலோ மருத்துவமனை, ஆசியாவிலேயே முதன்முறையாக, இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்காக உடலினுள் பொருத்தப்படும் மிட்ராக்ளிப் [MitraClip] மற்றும் டிரான்ஸ்கத்தீட்டர் ஆர்டிக் வால்வு ரீப்ளேஸ்மென்ட் (Transcatheter Aortic Valve Replacement (TAVR)) எனப்படும் டிஏவிஆர் ஆகிய இரு உள்சாதனங்களை ஒரே நோயாளிக்கு பொருத்தி மற்றொரு சாதனையை படைத்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 75 வயதான ஆண் நோயாளி ஒருவர் கடுமையான ஆர்டிக் ஸ்டெனோசிஸ் மற்றும் மிட்ரல் வால்வு (MitraClip) கோளாறு காரணமாக உடலின் தேவைகளுக்கேற்ற வகையில் ரத்தத்தை செலுத்த முடியாமல் இதயம் பிரச்சினைக்குள்ளாகும் கார்டியோஜெனிக் அதிர்ச்சியால் [Cardiogenic Shock] பாதிக்கபட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு மாரடைப்பு ஏற்பட்டு நிலைமை மேலும் சிக்கலானது.