சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுனர் போன்ற பணிகளுக்கு நேரடி நியமன தேர்விற்கான உத்தேச விடைக்குறிப்புகளின் மீது தேர்வர்கள் வரும் 13ஆம் தேதி வரையில் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2020-2021ஆம் ஆண்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுனர் பணிகளுக்கு நேரடி நியமனத்திற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை 2 லட்சத்து 13 ஆயிரத்து 893 பேர் எழுதினர். இந்த நிலையில், தேர்வர்கள் வினத்தாள் மற்றும் பதிலளித்த விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை www.trb.tn.nic.in இணையதளத்தில் இருந்து பதிவேற்றிக் கொள்ளலாம். அத்துடன் தேர்வுக்கான தற்காலிக உத்தேச விடை குறிப்புகளும் அனைத்து பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.