சென்னை: கடந்த இருபது நாள்களாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 20ஆவது நாளாக இன்றும் (ஏப்.26) விலையில் மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச் 22ஆம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. அதன்பின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.