சென்னை:பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஏழாவது நாளான இன்றும் (ஏப். 13) அதே விலைக்கு விற்கப்படுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 137 நாள்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், மார்ச் 22ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 20 நாள்களாக விலை உயர்ந்துகொண்டே வந்தது. அதன்படி, ஏப்ரல் 6ஆம் தேதி டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.41ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 96.67ஆகவும் இருந்தது.