இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்க வாய்ப்பில்லை எனத் தமிழ்நாடு நிதி அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. ஏழை, நடுத்தர மக்களை வதைக்கும் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டியது ஒன்றிய அரசின் பொறுப்பு என்பதை மறுப்பதற்கில்லை.
அதே நேரத்தில்,அவற்றின் மீதான மாநில அரசின் வரியைக் குறைப்போம் எனத் தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது அதனைச் செய்ய மறுப்பது மக்களை ஏமாற்றும் வேலை. மற்ற மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கும்போது தமிழ்நாடு அரசால் மட்டும் அதைச் செய்ய முடியாதா?
அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பிற்கு முக்கியக் காரணமாக இருக்கும் எரிபொருள் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவராமல்,விலைவாசியை எப்படிக் குறைக்க முடியும்?எனவே,பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.