தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெட்ரோல் விலை: பல மாநிலங்களில் சதம், சென்னையில் சதமடிக்க தயார்

போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 104.53 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. சென்னையிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியது.

பெட்ரோல் விலை
பெட்ரோல் விலை

By

Published : Jun 18, 2021, 8:38 AM IST

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேவருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துவருகின்றன.

தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலையைக் கண்டித்து அண்மையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இருப்பினும் விலையில் இறங்குமுகம் இல்லை. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து 98.14 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து 92.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 96.93 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 87.69 ரூபாய்க்கும் மும்பையில் பெட்ரோல் 102.82 ரூபாய்க்கும், டீசல் 94.84 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 104.53 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 95.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:டெல்லியில் ஸ்டாலின்: இன்று சோனியா காந்தியுடன் சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details