தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சதமடித்த டீசல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்! - ரூ 100ஐ தாண்டிய டீசல் விலை

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.09-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.18-க்கும் விற்பனையாகிறது.

பெட்ரோல் விலை
பெட்ரோல் விலை

By

Published : Apr 5, 2022, 10:27 AM IST

நாடு முழுவதும் பெட்ரோல்,டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று(ஏப்ரல்.05) பெட்ரோலின் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.110.09-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.100.18-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 30 பைசாவிலிருந்து 80 பைசா வரை உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.109.34-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.42-க்கும் விற்பனையானது.

இது குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும் என தெரிவிக்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகளிடம் கேட்டபோது, விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 21 பேருக்கு கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details