தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! - தமிழகத்தில் பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

சென்னை: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்த போதிலும் மதிப்புக் கூட்டு வரி உயர்வால், தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது.

Fuel price hike
Fuel price hike

By

Published : May 3, 2020, 11:10 PM IST

தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரி உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர்கிறது.

இந்த விலை ஏற்றமானது மே 3 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கானது, தமிழ்நாட்டில் சில கட்டுப்பாடுகளுடன் தளர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தளர்வு மே 4ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதையடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நாளில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அத்துடன் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை மீதான மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details