தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விநாயகர் சதுர்த்தியின்போது குறைந்த எண்ணிக்கையில் மட்டும் விநாயகர் சிலைகளை நிறுவக்கோரி வழக்கு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் மட்டும் விநாயகர் சிலைகளை நிறுவ உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

mhc
mhc

By

Published : Aug 12, 2022, 8:52 PM IST

சென்னை: விநாயகர் சதுர்த்திப் பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் விநாயகர் சிலைகளை நிறுவ கட்டுப்பாடு விதிக்கக்கோரி திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழகத் தலைவரும், வழக்கறிஞருமான கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், விநாயகர் சதுர்த்தியின்போது பொது இடங்களிலும், சாலைகளிலும், பிற மத வழிபாட்டுத்தலங்களுக்கு அருகிலும் அனுமதியின்றி விநாயகர் சிலைகள் வைக்கப்படுவதாகவும், அவை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கும் காரணமாகிவிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலைகள் வைப்பதையும், நீர்நிலைகளில் கரைப்பதையும் முறைப்படுத்த எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை எனவும், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக இந்து அமைப்புகள் நன்கொடை வசூலிப்பதையும் கண்காணிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என இந்து அமைப்புகளுக்கு அறிவுறுத்தும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:யானைகள் காப்பகமாக அகத்தியர் மலை அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என முதலமைச்சர் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details