தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருந்தி வாழ அனுமதிக்கக் கோரி சென்னை ஆணையரிடம் வழிப்பறிக் கொள்ளையன் மனு!

சென்னை: திருநின்றவூரைச் சேர்ந்த திருட்டு, வழிப்பறியில் ஈடுபடும் மகேஷ் என்பவர் திருந்தி வாழப் போவதாக, காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

Police magesh, Police magesh cop complaint, சென்னை ஆணையரிடம் வழிப்பறி கொள்ளையன் மனு, திருந்தி வாழ அனுமதிக்க கோரி
திருந்தி வாழ அனுமதிக்க கோரி

By

Published : Feb 2, 2020, 11:48 AM IST

சென்னை திருநின்றவூரைச் சேர்ந்தவர் மகேஷ் என்கிற ’போலீஸ் மகேஷ்’. இவர் மீது, வட சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், தன்னை காவல் அலுவலர் எனக்கூறி தனியாக செல்லும் முதியவர்களிடம் வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டுட்டார்.

இச்சூழலில், இனி மேல் வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடமாட்டேன் என்றும், தான் திருந்தி வாழ வாய்ப்பு வழங்கக்கோரி, சென்னை காவல் துறை ஆணையரை சந்தித்து மனு அளித்தார்.

பின்னர் இது தொடர்பாக மகேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக, தன் மீது வட சென்னை காவல் நிலையங்களில் 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது, பல முறை சிறைக்குச் சென்று திரும்பியுள்ளேன். சிறையில் இருந்து திருப்பிய பின்னரும் முதியவர்களிடம் காவல் அலுவலர் எனக்கூறி, வழிப்பறி ஈடுபட்டு வந்தேன்.

இது தொடர்பாக, என்னை மட்டுமல்லாமல் என் குடும்பத்தினரையும் தொடர் விசாரணைக்கு காவல் துறையினர் உட்படுத்தி வருகின்றனர். தொடர் விசாரணைக்கு குடும்பத்தினரை அழைப்பதால் ஏற்பட்ட மிகுந்த மன உளைச்சலால், குற்றச் சம்பவங்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ்வதற்கு அனுமதி கோரி சென்னை காவல் துறை ஆணையரை சந்தித்து மனு அளித்துள்ளேன்.” என்றார்.

திருந்தி வாழ அனுமதிக்கக் கோரி மனு அளித்த கொள்ளையன் மகேஷ்க்கு, உதவி புரிந்ததாக தேனாம்பேட்டையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் குருமூர்த்தி என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details