தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெண்ணிடம் பேசியதால் துடிக்க துடிக்க வெட்டப்பட்ட பட்டியலின இளைஞரின் கால்; முறையான விசாரணை நடத்தக் கோரி டிஜிபியிடம் மனு - துடிக்க துடிக்க வெட்டப்பட்ட பட்டியல் இன அருந்ததியர் இளைஞரின் கால்

சாதிய வன்மத்துடன் கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது பட்டியலின வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர்.

டிஜிபியிடம் மனு
டிஜிபியிடம் மனு

By

Published : Jun 7, 2022, 8:59 AM IST

Updated : Jun 7, 2022, 9:43 AM IST

சென்னை:தருமபுரியில் உயர் வகுப்பை சார்ந்த பெண்ணிடம் பேசியதாக பட்டியல் இன அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த ஜீவா என்பவரை சிலர் அடித்து சித்தரவதை செய்து அவரது காலை துண்டாக வெட்டியது தொடர்பாக மே 17 இயக்கம், தமிழ் புலிகள் அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்பினை சேர்ந்த நிர்வாகிகள் டிஜிபியிடம் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்ப்புலிகள் கட்சியின் பொது செயலாளர் பேரறிவாளன், 'தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தச் ஜீவா (17) என்ற இளைஞர் கடந்த 28ஆம் தேதி சந்திரநல்லூர்கோவில் அருகே தனது நண்பர்களுடன் சென்று தோழியை சந்தித்து பேசிவிட்டு சென்றார்.

முறையான விசாரணை நடத்தக் கோரி டிஜிபியிடம் மனு

அப்போது காரில் வந்த ஒரு கும்பல் ஜீவா மற்றும் அவரது நண்பரை கொடூரமாக தாக்கிவிட்டு, ஜீவாவின் ஒரு காலை துண்டாக வெட்டி கொடூர சம்பவத்தை அறங்கேற்றினர். இது தொடர்பாக தருமபுரி போலீசார் விபத்து என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர் சாதி வகுப்பைச் சேர்ந்தப் பெண்ணிடம் பேசியதால் ஜீவாவை சாதிய வன்மத்துடன் கும்பல் ஒன்று கொலை வெறி தாக்குதல் நடத்தியதாகவும், கொலை வெறி தாக்குதல் நடத்திய வழக்கை வெறும் சாதாரண விபத்து என தருமபுரி போலீசார் வழக்குபதிவு செய்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், சாதிய வன்மத்துடன் கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்களை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் ஜீவாவிடம் விசாரணை நடத்தி, அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என டிஜிபியிடம் கோரிக்கை வைத்தார்.

இதேபோல் ஜீவாவின் சகோதரர் முருகனும் டிஜிபி அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2006 வாரணாசி தொடர் குண்டுவெடிப்பு வழக்கு - பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு தூக்கு!

Last Updated : Jun 7, 2022, 9:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details