தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் தீவிரவாத தடுப்பு படை உருவாக்க வேண்டும் -  நீதிமன்றத்தில் மனு - chennai

தமிழ்நாட்டில் தீவிரவாத தடுப்பு படையை உருவாக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தீவிரவாத தடுப்பு படை உருவாக்க வேண்டும்- உயர் நீதிமன்றத்தில் மனு
தமிழ்நாட்டில் தீவிரவாத தடுப்பு படை உருவாக்க வேண்டும்- உயர் நீதிமன்றத்தில் மனு

By

Published : Oct 8, 2022, 4:01 PM IST

சென்னை: இதுதொடர்பாக வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாகவும், ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களின் எழுச்சி காரணமாகவும் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இலங்கையுடன் கடல் எல்லையை பகிர்ந்துள்ள தமிழ்நாட்டிற்கும் இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தாலும் கூட தீவிரவாத தாக்குதல் போன்ற நேரங்களில் அதனை எதிர்கொள்ள ஒரு சிறப்பு அமைப்பு தேவை என்பதால், மற்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் தீவிரவாத தடுப்பு பிரிவை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் தமிழ்நாட்டில் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிடக் கோரியுள்ளார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க:கடவுளை வழிபடுவது தனிநபர்களின் நம்பிக்கை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

ABOUT THE AUTHOR

...view details