கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதனடிப்படையில், மூன்று லேயர்கள், N95, மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுபவை, பருத்தி, வெட்டி வேர் ஆகியவற்றால் செய்யப்பட்டவை என, பலவகை முகக் கவசங்கள் விற்கப்பட்டு வருகின்றன.
இவை மட்டுமின்றி மக்களைக் கவரும் வகையில் உருவங்கள் அச்சிடப்பட்ட பல்வேறு முகக் கவசங்களும் அறிமுகமாகியுள்ளன.
இந்நிலையில், முகக் கவசங்களை பயன்படுத்த வேண்டிய கால அளவு குறித்தும், அவற்றின் விலை, தரம், காலாவதியாகும் தேதி ஆகியவற்றுக்கான விதிகளை உருவாக்கக் கோரியும் மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரமணி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ”முகக்கவசம் தொடர்பான தெளிவான விதிமுறைகளை அரசு அறிவிக்கவில்லை என்றால், முகக் கவசத்தை யார் வேண்டுமானலும் உற்பத்தி செய்து, அவர்கள் விருப்பப்பட்ட விலைக்கு, ரசீது ஏதுமின்றி விற்கும் சூழல் உருவாகும்” எனத் தெரிவித்துள்ளார்.