தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

T23 புலியை சுட்டுக்கொல்ல எதிர்ப்பு - உயர்நீதிமன்றத்தில் வழக்கு - வேட்டையாட உத்தரவு

நீலகிரியில் உலவும் புலியை (T23) வேட்டையாட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

T23புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு
T23புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு

By

Published : Oct 2, 2021, 10:12 PM IST

சென்னை: நீலகிரி மாவட்ட கூடலூர், தேவன் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(51). இவர் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி புலி(T23) தாக்கி உயிரிழந்தார். பின்னர் அந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் புலியை இதுவரை பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, அந்த புலியை சுட்டுக் கொல்லும்படி, முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை எதிர்த்து உத்தரபிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர், ஆன்லைன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை, புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளை பின்பற்றவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

T23புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு

இதேபோல, புலியை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, உயிருடன் பிடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பின் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரூ.200 கோடி ஜீவனாம்சம் வேண்டாம்... சமந்தா கண்ணீர்...

ABOUT THE AUTHOR

...view details