தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு காவல்துறை உத்தரவை ரத்து செய்யக்கோரி விசிக வழக்கு - Ban on Popular Front of India

சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு வழங்கப்பட்ட தடையை எதிர்த்து விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 1, 2022, 3:22 PM IST

Updated : Nov 29, 2022, 11:37 AM IST

சென்னை:விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் வகையில், சமய நல்லிணக்க மனித சங்கிலி நடத்த அனுமதி கேட்டு கடந்த (செப்.29) ஆம் தேதி காவல்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டது.

அதன்பின் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில், மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்கூட்டி எந்த நோட்டீசும் அனுப்பாமல், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும், அதே நாளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த இருப்பதாகவும் கூறி, தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பையும், தங்களையும் ஒரே மாதிரியாக பாவிக்க முடியாது என்பதால், சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த திமுகவினர்..

Last Updated : Nov 29, 2022, 11:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details