அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு - Madras High court
![அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு சென்னை உயர் நீதிமன்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8678603-747-8678603-1599219513376.jpg)
17:03 September 04
கலை, அறிவியல், பொறியியல் கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அரசு உத்தரவை ரத்து செய்து அரியர் தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசின் உத்தரவு பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது, மாணவர்களுக்கு இடையில் பாகுபாடு ஏற்படுத்தும் வகையில் அரசு உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்தும் போது அரியர் தேர்வுகளை ரத்து செய்வது அரசின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. தேர்வை ரத்து செய்ய பல்கலைக்கழக சிண்டிகேட், செனட்டுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அரியர் தேர்வுகளை தள்ளிவைக்க முடியுமே தவிர ரத்து செய்ய முடியாது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.