விருதுநகர்: தென்காசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் மூத்தத் தலைவரும், தமிழ்நாடு சிறுபான்மை நலத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் பின்னர் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து நான்காண்டுகளாக நடத்த முடியாத உள்ளாட்சித் தேர்தலை ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் நடத்தி முடித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து வேகமாக உள்ளாட்சித் தேர்தல் வந்த காரணத்தினால் பொதுமக்களுக்கு வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்திருக்கலாம்.
வாக்குப்பதிவு குறைவுக்கு அல்போன்ஸ் சொல்லும் காரணம்
ஆனால் அவ்வாறு ஆர்வம் குறைவது நல்லதல்ல. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஆதாரம் தேர்தல்தான். ஆகவே தேர்தலில் மக்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. தேர்தலில் வாக்காளர்கள் பங்களிப்பு குறைந்ததற்கான காரணத்தை அனைவரும் ஆராய வேண்டும்.
அரசு, அரசியல் கட்சியினர் மட்டுமின்றி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்களுக்காகப் பணியாற்றுகின்ற அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என மக்கள் தேர்தலில் ஏன் வாக்களிக்க வரவில்லை என்பதை ஆராய வேண்டும். நல்ல வேட்பாளர்கள் வரவில்லை. அதனால் மக்கள் வாக்களிக்க வரவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
தேர்தலில் போட்டியிடத் தகுதியுள்ள அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். நல்லவர்கள் அரசியலிலிருந்து விலகுவதால்தான் சில நேரங்களில் விரும்பத்தகாத நபர்கள் அந்த இடத்தில் அமர்ந்துவிடுகின்றனர். அரசியல் என்பது புறந்தள்ள கூடியது அல்ல. அரசியல் மூலமாகத்தான் நல்ல அதிகாரத்தைச் செலுத்தும் நல்ல மக்கள் பிரதிநிதிகள் வர முடியும்.
திருநீறை அழிப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?