சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்ட வருகிறது. போக்குவரத்து செலவு, வரிவிதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் முக்கிய மாவட்டங்களான சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர் என, ஒவ்வொரு மாவட்டத்திலும் பெட்ரோல் விலை மாறுபட்டு காணப்படுகிறது.
சென்னையில் இன்று
பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொது முடக்கத்தால் பொருளாதார ரீதியாக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியமான பெட்ரோல், டீசல் விலை உயர்வும் மக்களை பெருமளவில் பாதித்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் சென்னையில் இன்று (ஜூன். 27) ஒரு லிட்டர் பெட்ரோல் 99.10 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 93.23 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.