சென்னைவிமான நிலையம் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் ஒன்று வந்தது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர சோதனை நடத்தியதில் அது புரளி எனத் தெரிய வந்தது.
முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது - காரணம் கஞ்சா போதையாம்! - chief minister
சென்னை விமான நிலையம் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை காவல் துறையினர் கைது செய்தனர். கஞ்சா போதையில் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர், மிரட்டல் விடுத்தது தொடர்பாக தேனாம்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் மிரட்டல் விடுத்தவர்,
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த தாமரைக் கண்ணன் எனத்தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர். இதுகுறித்தான விசாரணையில் அவர் கஞ்சா போதையில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து தேனாம்பேட்டை காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:தனியார் மதுபான கடை மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீச்சு - புதுச்சேரியில் பரபரப்பு