தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குன்றத்தூரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்பு - கடத்தலில் ஈடுபட்ட 9 பேர் கைது! - ஆத்தூர்

குன்றத்தூரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் சேலத்திலிருந்து மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

kidnap
kidnap

By

Published : Jun 1, 2022, 10:22 PM IST

Updated : Jun 1, 2022, 11:01 PM IST

சென்னை: சென்னையை அடுத்த கோவூரைச் சேர்ந்த சுரேஷ்குமார்(48) என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது வீட்டை விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார்.

இதையடுத்து ஒரு தம்பதி வீட்டை வாங்குவதற்காக வந்துள்ளனர். வீட்டை பார்த்துவிட்டு சென்ற அவர்கள், அடுத்த நாள் முன்பணம் கொடுப்பதற்காக சுரேஷ்குமார் வீட்டுக்குச் சென்றுள்ளனர். முன்பணம் தருவது குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல், சுரேஷ் குமாரின் கை, கால்களை கட்டி கடத்திச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மாங்காடு போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சுரேஷ் குமார் கடத்திச் செல்லப்பட்டதும், சொகுசு காரில் ஒரு ஆணும் பெண்ணும் செல்வதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதன்படி விசாரணை நடத்திய போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ராஜராஜன் மற்றும் அவரது மனைவியைப் பிடித்தனர்.

அவர்களிடம் விசாரித்தபோது, சிதம்பரத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் கூறியதன் பேரில் சுரேஷ்குமாரை கடத்தியதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, ஆத்தூரில் கடத்தி வைக்கப்பட்டிருந்த சுரேஷ்குமாரை தனிப்படை போலீசார் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்டதாக, முத்துசாமி(39), ராஜராஜன்(52), ரவிராஜன்(31), அரவிந்த்ராஜ்(32), அரவிந்தன்(27), பாபு(40), மணிகண்டன்(25), பிச்சமுத்து(51), ராஜசேகர்(35) உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கார்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "கடத்தப்பட்ட சுரேஷ்குமார் இலங்கையைச் சேர்ந்தவர். இவரது தம்பி தம்பிலா என்பவர், வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள், இரிடியம் உள்ளிட்டவற்றை கடத்தி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர்களுடன் சிதம்பரத்தைச் சேர்ந்த முத்துசாமி பழக்கமாகி தொழில் செய்து வந்துள்ளார். இந்த தொழிலுக்கு முத்துசாமி அதிக அளவில் பணம் செலவழித்திருந்த நிலையில், போதைப்பொருளை விற்ற சில கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு தம்பிலா தலைமறைவானதாக தெரிகிறது. தம்பிலா, அவரது அண்ணனின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கருதிய முத்துச்சாமி, சுரேஷ்குமாரிடமிருந்து பணத்தை வாங்கவே இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திருப்பூரில் தாய், மகன்கள் கொலை: வழக்கில் தேடப்பட்டவர் கிணற்றில் சடலமாக மீட்பு

Last Updated : Jun 1, 2022, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details