தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ம.பியில் மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி! - சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தில் தடை செய்யப்பட்டிருந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு அம்மாநில அரசு மீண்டும் அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மீண்டும் லாட்டரி
மீண்டும் லாட்டரி

By

Published : Sep 15, 2021, 6:47 PM IST

இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை அனைத்து மாநிலங்களிலும், லாட்டரி சீட்டு விற்பனை கொடிகட்டி பறந்தது. பின்னர் அதன் மீது கொண்ட மோகத்தால் பலர் தங்களது வாழ்நாள் சேமிப்பை இழந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதனையடுத்து கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஸ்டிரா, கோவா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களைத் தவிர்த்து, பல்வேறு மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை பிறப்பிக்கப்பட்டது. தற்போது மாநில வருவாயை பெருக்கும் நோக்கில், தடையை விலக்கி மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனையை ஊக்கப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

அரசிதழில் வெளியாகிய உத்தரவு

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் தடை செய்யப்பட்டிருந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு மீண்டும் அனுமதியளித்து முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பான உத்தரவு அந்த மாநில அரசின் அரசிதழிலும் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனைக்கு, தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு மீண்டும் அனுமதி வழங்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சோனு சூட் அலுவலகத்தில் வருமானவரி சோதனை!

ABOUT THE AUTHOR

...view details