சென்னை: தீபாவளி தினத்தன்று இறைச்சி கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. இது குறித்த அறிவிப்பாணையில், "இந்தாண்டு நவ.4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த நாள் மகாவீரர் நினைவு தினமாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மகாவீரர் நினைவு தினத்தன்று இறைச்சிக் கடைகள் மூடப்படும் நடைமுறை தமிழ்நாட்டில் உள்ள சூழலில், பொதுமக்களின் உணர்வுகளை கருத்திற்கொண்டும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்தும் தீபாவளி நாளன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.