தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க அனுமதி! - உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் இயங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.

பழனிசாமி

By

Published : Aug 5, 2020, 6:36 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் (Tamil Nadu Gym Owners & Trainers Welfare Association) சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ள உடற்பயிற்சியகங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையினை பரிசீலித்த முதலமைச்சர் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க அனுமதி அளித்து ஆணை பிறப்பித்துள்ளார். அதில், மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க ஆகஸ்ட் 5 ஆம்தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள் (stand alone only), 50 வயது, அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல் முறைகள் (Standard Operation Procedure) தனியாக வெளியிடப்படும். அவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது என, அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details