தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி - tamilnadu government

permission-to-jallikattu-4-more-districts-in-tamil-nadu
permission-to-jallikattu-4-more-districts-in-tamil-nadu

By

Published : Jan 12, 2021, 5:55 PM IST

Updated : Jan 12, 2021, 7:42 PM IST

17:54 January 12

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்து டிசம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது. இருப்பினும், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், பல்வேறு மாவட்டத்தினர் தங்களது பகுதியிலும் அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துவந்தனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதனடிப்படையில் வெளியிடுள்ள ஆணையில், "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று கிராமங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 13 கிராமங்களிலும், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமத்திலும், வேலூர் மாவட்டத்தில் 25 கிராமங்களிலும் வருகின்ற 14ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் விழா ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போட்டிகளின் போது கரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஜல்லிக்கட்டை காண ராகுல், நட்டா மதுரை வருகை!

Last Updated : Jan 12, 2021, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details