பேரறிவாளன் விடுதலையில் ஆளுநரே முடிவு எடுப்பார்: மத்திய அரசு - பேரறிவாளன் விடுதலை
14:17 January 21
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் தரப்பு தாக்கல் செய்திருக்கும் மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடந்தபோது, பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு பதில் ஆளுநரே முடிவு செய்வார் எனவும், அவரது விடுதலை குறித்து தமிழ்நாடு ஆளுநர் 3 அல்லது 4 நாட்களுக்குள் முடிவெடுப்பார் எனவும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.