தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பேரறிவாளனுக்கு கூடுதலாக 2 வாரம் பரோல் நீட்டிப்பு - உயர் நீதிமன்றம் - ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிக்கு பரோல்

http://10.10.50.85//tamil-nadu/06-November-2020/tn-che-01-perarivalanparoleextended-script-7204624_06112020122404_0611f_1604645644_981.jpeg
http://10.10.50.85//tamil-nadu/06-November-2020/tn-che-01-perarivalanparoleextended-script-7204624_06112020122404_0611f_1604645644_981.jpeg

By

Published : Nov 6, 2020, 11:54 AM IST

Updated : Nov 6, 2020, 2:18 PM IST

11:45 November 06

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஏற்கெனவே 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டிருந்த நிலையில்,மேலும் 2 வாரங்களுக்கு பரோலை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி, அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

அதன்படி பேரறிவாளன் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல் பரோலில் அவரது இல்லத்தில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் பரோல் காலம் வரும் 9ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில், சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பிற உடல்நலக் குறைபாடுகள் காரணமாக, மேல் சிகிச்சைப் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு கேட்டு அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், மருத்துவ சிகிச்சையைத் தொடர வேண்டியுள்ளதால் அதனைக் கருத்தில்கொண்டு பரோலை நீட்டிக்க வேண்டும் என அவர் தரப்பு வழக்கறிஞர் சரவணன் கோரிக்கை விடுத்தார்

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பேரறிவாளனின் பரோலை, மேலும் 2 வாரங்களுக்கு (வரும் 23ஆம் தேதி வரை) நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல்

Last Updated : Nov 6, 2020, 2:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details