பெப்சி சிவா, பெப்சி திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தில் செயலாளர், தலைவர், என பல பொறுப்புகளில் 20 வருடங்களுக்கு மேலாக பதவி வகித்தவர். அதுமட்டுமல்லாது, அகில இந்திய மாமன்ற தலைவராக 5 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.
பெப்சி சிவா பாஜகவின் முக்கியப் பொறுப்பில் நியமனம் - பாஜகவின் தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளர்
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளராக பெப்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்போது வரை பெப்சி யூனியனின் வளர்ச்சியில் முக்கியமான நபராக இருக்கிறார். பி.ஜே.பி கட்சியிலும், தனது நற்பணியை நன்றாக செய்து வருவதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளராக பெப்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
பெப்சி சிவா தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில், உருவாகியுள்ள 'தமிழரசன்' படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் சுரேஷ்கோபி, சோனுசூட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அடையாறில் உள்ள ஒரு கோயிலில் நடத்தினார். அவ்விழாவிற்கு பொன்.ராதாகிருஷ்ணன், ராதாரவி, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பி.ஜே.பி-யின் பல முக்கிய விஜபிக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.