தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தீவிரமாகும் கரோனா - மக்கள் வீடுகளைக் காலி செய்யும் அவலம்!

சென்னை: தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை பேரூராட்சியில் ஒரே பகுதியில் 14 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டும், தடுப்பு நடவடிக்கை ஏதும் இல்லாததால் அப்பகுதி மக்கள் வீடுகளைக் காலி செய்து வருகின்றனர்.

fear
fear

By

Published : Jun 13, 2020, 7:42 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. இதில் தாம்பரம் தாலுகாவில் 50 பேருக்கும், அதிலும் குறிப்பாக தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை பேரூராட்சியில் ஒரே பகுதியில் 14 பேருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ள்ளனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கும் இப்பகுதியின் வேல் நகர் 1இல், முதல் 4 தெருக்கள் முழுவதும் நோய்த் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. இருப்பினும், பீர்க்கன்காரணை பேரூராட்சி நிர்வாகம் தொற்று பரவலைத் தடுக்க எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காததால், தொற்று பாதித்துள்ள தெருக்கள், வீடுகளில் தடுப்புகள் கூட அமைக்கப்படாமல் உள்ளன.

தீவிரமாகும் கரோனா தொற்று - மக்கள் வீடுகளை காலி செய்யும் அவலம்!

மேலும், நோய்த் தொற்று குறித்த அச்சம் துளியுமின்றி பலர் முகக்கவசம் அணியாமல், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறிவருகின்றனர். இதனால் அப்பகுதியினர் பலர், தங்களது வீடுகளைக் காலி செய்து கொண்டு வேறு பகுதிக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏவுக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details