சென்னை: நேற்று (மே. 26) ரூ.31,500 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி சென்னை வருகை தந்தார்.
அப்போது பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்திய கடற்படை விமான தளத்தில் இருந்து நேரு விளையாட்டு அரங்கத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மெட்ரோ ரயிலில் மக்கள் பயணம் இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து மெட்ரோவில் பயணித்த பொதுமக்கள் டிக்கெட் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர்.
இதையும் படிங்க:'தமிழ் மொழியையும், கலாசாரத்தையும், மேம்படுத்த இந்திய அரசாங்கம் முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறது' - பிரதமர் மோடி!