தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோயிலை திறக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் - Thandaiyarpettai road strike news

சென்னை: தண்டையார்பேட்டை அருகே மூடப்பட்ட கோயிலை திறக்கக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தண்டையார்பேட்டை பொதுமக்கள்
தண்டையார்பேட்டை பொதுமக்கள்

By

Published : Mar 13, 2021, 4:16 PM IST

தண்டையார்பேட்டை வஉசி நகரில் உள்ள செல்லியம்மன் கோயில் , நிர்வாக பிரச்சினை காரணமாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயிலை உடனடியாக திறக்க வலியுறுத்தி, பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, கோயில் மூடப்பட்டுள்ளதால், சிவராத்திரி, மாசி அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாள்களில் கூட கோயிலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதனையடுத்து, அங்கு சென்ற புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர், பக்தர்களுடன் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details