தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாஜகவின் தேர்தல் அறிக்கையை தோலுரிக்கும் நெட்டிசன்கள் - People comment on social media

'தொலைநோக்கு பத்திரம்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கை சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

பாஜகவின் தேர்தல் அறிக்கையை தோலுரிக்கும் சமூக வலைதளங்கள்
பாஜகவின் தேர்தல் அறிக்கையை தோலுரிக்கும் சமூக வலைதளங்கள்

By

Published : Mar 24, 2021, 4:36 AM IST

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை 'தொலைநோக்கு பத்திரம்' என்ற பெயரில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மார்ச் 22ஆம் தேதி வெளியிட்டார். அறிக்கையில் பெரியார் கொண்டு வந்த எழுத்து சீர்திருத்தத்திற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட 'லை' எழுத்து, இடம்பெற்றிருப்பது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது மட்டுமின்றி, நீட் தேர்வு தொடரும், பள்ளி பாடத்தில் ஆன்மிக பாடநூல்கள் சேர்க்கப்படும், கூடுதல் மொழி ஒன்று கற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும், இந்து சமய அறநிலைத்துறையிடம் இருந்து ஹிந்து கோயில்கள் மீட்கப்பட்டு புதிய நலவாரியம் அமைத்து நிர்வகிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு விதமான அதிர்ச்சிகர அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தங்கி உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு புதிய குடியிருப்புகள் என்ற அறிவிப்பு புலம்பெயர் தொழிலாளர்களை இங்கேயே தங்க வைக்கும் முயற்சியாகவும், அவர்களின் வாக்குகளை பெற பாஜக தீட்டும் திட்டம் இதுவென்றும் சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்து உள்ளது. பொது விநியோகம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும் தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரே தேசம் ஒரே ரேஷன்கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இது போன்று புதிய புதிய அறிவிப்புகள் தமிழ்நாட்டு மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில் தங்கி தமிழர்களும் வேலைபார்த்து வருகின்றனர், அவர்களுக்கு இது போன்ற திட்டங்களை அறிவிக்காத பாஜக தமிழ்நாட்டில் மட்டும் அறிவித்திருப்பது சதி வேலை என நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதே போன்று குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெற வலியுறுத்தப்படும் என அதிமுக கூறி உள்ள நிலையில் 'திரும்ப பெற வாய்ப்பே இல்லை' என பாஜக தேசிய செயலாளர் சி.டி ரவி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details