சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, அதிமுக உறுப்பினர் விருகை ரவியின் கேள்விக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, சென்னை முழுவதும் புதைவடக் கம்பிகள் அமைக்கும் பணி விரைவில் முடிவடையும் என்றார். விருகம்பாக்கம் தொகுதியில் புதைவடக் கம்பிகள் அமைக்கும் பணி 50% நிறைவுற்று, எஞ்சிய பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
’சட்டப்பேரவையை புறக்கணித்தவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள்’
சென்னை: சென்னை முழுவதும் புதைவடக் கம்பிகள் அமைக்கும் பணிகள் விரைவில் முடியும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
thangamani
தொடர்ந்து பேசிய அமைச்சர், மார்கழி மாதத்தில் கூட வானம் மும்மாரி பொழியும் ராசிக்கு சொந்தக்காரர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றார். சட்டமன்றத்தை புறக்கணித்த எதிர்க்கட்சிகளை வரும் தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள் எனவும் அமைச்சர் தங்கமணி விமர்சித்தார்.
இதையும் படிங்க:'ஜெ. சமாதியை மூடுபவர்கள், அதிமுக தலைமையகத்தையே மூடிவிடுவார்களா?'