சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் பார்த்தசாரதி. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர், தமது இல்லத்திலேயே மருத்துவமனை அமைத்து மருத்துவம் பார்த்து வந்தார்.
தொடக்க காலக்கட்டத்தில் 60 பைசா கட்டணத்தில் இருந்து மக்களுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கி, கால மாற்றத்திற்கு ஏற்ப சொற்ப அளவிலான கட்டணத்தை கூட்டி 50 ரூபாய் வரைக்கும் மருத்துவ சேவையை தொடர்ந்தார். சில நேரங்களில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மருத்துவம் பார்த்து வந்தார்.