தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்வழியில் படித்தவர்களுக்கே அரசுப் பணி! பழ.நெடுமாறன் வலியுறுத்தல்...! - tamil language

அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மத்திய அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அஸாமிய மொழியை கட்டாயப் பாடமாக்கும் திட்டத்தை அஸ்ஸாம் அமைச்சரவை அறிவித்துள்ளது. அதேபோல் தமிழ் மொழிக்கு மாநிலத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பழ. நெடுமாறன் கோரிக்கை வைத்துள்ளார்.

பழ நெடுமாறன்
பழ நெடுமாறன்

By

Published : Jul 9, 2020, 10:50 AM IST

சென்னை:தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கே அரசுப் பணி என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மத்திய அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அஸாமிய மொழியை கட்டாயப் பாடமாக்கும் திட்டத்தை அஸ்ஸாம் அமைச்சரவை அறிவித்துள்ளது. இந்த முடிவிற்கு அம்மாநில ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், 10ஆம் வகுப்பு வரை அஸாமிய மொழியை கற்கும் மாணவர்களுக்கே அரசுப் பணிகள் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பள்ளிகளில் இதுகூட செய்யப்படுவதில்லை. எனவே, உடனடியாக தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படவேண்டும்.

மகன் கொலை வழக்கு: குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்ககோரி தாயார் மனு!

அவ்வாறு தமிழ்ப் படித்த மாணவர்களுக்கு மட்டுமே அரசுப் பணிகள் அளிக்கப்படும் எனும் சட்டத்தைத் தமிழ்நாடு அரசும் கொண்டுவரவேண்டுமென வலியுறுத்துகிறேன். பள்ளிகளில், மேல்நிலைப் பள்ளிகள் வரை தமிழ்வழிக் கல்வியை குறிக்கோளாகக் கொண்டு நமது பாடத்தை மாற்றவேண்டும். பின்னர் அது பட்டப் படிப்புகளுக்கும் விரிவாக்கப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details