இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் தொழில் வரியை மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள், இணையதளம், செல்போன் செயலி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள், உரிமம் ஆய்வாளர்கள் வாயிலாக செலுத்த வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சொத்துவரி செலுத்த இன்றே கடைசி நாள்
சென்னை மாநகராட்சி சொத்துவரி மற்றும் தொழில் வரி செலுத்த இன்றே கடைசி நாள், தவறினால் வட்டி விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுவரை 8 லட்சத்து 18 ஆயிரத்து 451 பேர் சொத்து வரியையும், 80 ஆயிரத்து 496 பேர் தொழில் வரியும் செலுத்திவிட்டனர். இதுவரை செலுத்தாதவர்கள் இன்று நள்ளிரவு 12 மணிக்குள் செலுத்த வேண்டும். இன்றே கடைசி நாள் என்பதால் தவறினால் வட்டி விதிக்கப்படும். இணையதளம், செல்போன் செயலி மூலமாக சொத்து, தொழில் வரி செலுத்தும்போது, ஏதேனும் சந்தேகங்கள், சிக்கல்கள் ஏற்பட்டால், மாநகராட்சியின் ‘1913’ என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து செல்லும்- உச்ச நீதிமன்றம்