தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரேபிட் டெஸ்ட் எடுத்தால் மட்டுமே விமானத்தில் செல்ல அனுமதி?- பயணிகள் போராட்டம் - கரோனா சான்றிதழ்

சென்னையில் இருந்து கொழும்பு வழியாக துபாய் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 42 பயணிகள் அனுமதிக்கப்படாததால் அலுவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

42 பயணிகளை அனுமதிக்கவில்லை
42 பயணிகளை அனுமதிக்கவில்லை

By

Published : Nov 3, 2021, 10:06 AM IST

சென்னை:விமான நிலையத்திலிருந்து கொழும்பு வழியாக துபாய் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (நவ.02) காலை 10 மணிக்குப் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகளிடம், அலுவலர்கள் கரோனா சான்றிதழ் பரிசோதனை செய்தனர்.

அப்போது துபாய் செல்லும் பயணிகள் ரேபிட் டெஸ்ட் எடுத்தால் மட்டுமே விமானத்தில் அனுமதிக்க முடியும் என தெரிவித்தனர். இது குறித்து பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலர்களிடம் கேட்டபோது, சென்னையில் இருந்து கொழும்பு வழியாக துபாய் செல்ல 10 மணி நேரத்திற்கு மேல் ஆகும். எனவே ராபிட் டெஸ்ட் 6 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும்’ என கூறி ரேபிட் பரிசோதனை செய்ய மறுத்தனர்.

இதனால் 42 பயணிகளும் விமானத்தில் செல்ல அனுமதிக்காததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் விமானம் புறப்பட்டு சென்று விட்டதால் இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலர்களிடம் கேட்டபோது முறையாக எந்த பதிலும் அளிக்காமல், ‘நீங்கள் முன்பதிவு செய்த பணத்தை திருப்பி பெற்றுக் கொள்ளுங்கள்’ என அலட்சியமாக தெரிவித்துள்ளனர்.

இதனால் பயணிகளுக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலர்களும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து பயணிகள் கூறுகையில், “முன்கூட்டியே தங்களிடம் தெரிவிக்காமல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலர்கள் முன் பதிவு செய்துள்ளனர்.

எனவே துபாய் செல்லும் மாற்று விமானம் மூலமாக அல்லது நேரடி விமானத்தில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்” என எச்சரித்தனர்.

இதையும் படிங்க:தீபாவளிக்கு வெளியூர் செல்பவர்களின் கவனத்திற்கு - சைலேந்திரபாபு என்ன கூறினார் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details