தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 30, 2022, 3:35 PM IST

ETV Bharat / city

"பாட்னர்" - கெத்தான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் "பாட்னர்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

partner
partner

சென்னை:அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் "பாட்னர்". இதில் நாயகனாக நடிகர் ஆதியும், கதாநாயகியாக நடிகை ஹன்சிகா மோத்வானியும் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனீஸ் காந்த், தங்கதுரை உள்ளிட்டப் பலர் நடித்திருக்கிறார்கள். சபீர் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில், பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் ஆர்யா, படக்குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கலர்ஃபுல்லாகவும், கெத்தாகவும் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதையும் படிங்க: ‘பீஸ்ட்’ கட் அவுட்-க்கு பால் அபிஷேகம் - விஜய் மீது பால் முகவர்கள் சங்கம் புகார்


ABOUT THE AUTHOR

...view details